Pages

Thursday 13 December 2012

ஈசி தமிழ் - eeZee Tamil Beta - a Tamil Typing Software


நம் எழுத்துலகம் என்பது இன்று நேற்று உருவானதல்ல பனையில் புனைந்த தொல்காப்பியம் முதல் கணினியில் வரையும் Blogspotகள் வரை நம் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம்

 

பழங்காலத்தில் எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் கீறினோம், உளியைக் கொண்டு பாறையில் செதுக்கினோம், பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுதினோம். கருப்புமை கொண்டு காகிதத்தில் அச்சிட்டோம். புத்தகங்கள் அச்சு இயந்திரத்திலும் வணிகக்கடிதங்கள் தட்டச்சு இயந்திரத்திலும் தயாரானது. கணினி வரவுக்குப் பிறகு தட்டச்சுவின் தேவையும் குறைந்தது, அச்சுக்கலையும் offsetக்கு மாறியது. இம்மாற்றத்திற்கு பிறகுதான் தமிழ் எழுத்தாளர்கள் கணினி மூலம் சில தமிழ் எழுத்துருக்களைப் (Tamil Fonts) பயன்படுத்தி எழுதத் துவங்கினர் எனலாம். இம்முறையில் Type செய்தவை எந்த எழுத்துருவில் Type செய்தோமோ அந்த எழுத்துரு இல்லாத கணினிகளில் அதை பயன்படுத்தவியலாது. இதனை உணர்ந்த தமிழக அரசு எல்லா வகை கணினியும் Support செய்யும் வகையில் Tamil 99 என்ற எழுத்துருவை அறிமுகப்படுத்தியது. Tamil99 என்ற விசைப்பலகை இதற்கு முன் இருந்த முறைகளின் சுமைகளை குறைத்ததே தவிர முற்றிலும் நீக்கவில்லை.

 

இத்தகு சூழ்நிலையில் தான் Phonetic (ஒலியியல்) முறையில் type செய்யும் NHM, E-கலப்பை போன்ற மென்பொருள்கள் வலம் வரத் துவங்கின. கரும்பலகையில் எழுதத் துவங்கிய நாம் இன்று விசைப் பலகையில் விளையாட வைத்தது. எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயரத்துவங்கியது. தமிழர்களின் கருத்துப்பதிவுகளும் (Documentation of idea) உலக அரங்கில் அதிகம் தென்படலாயின.

 

இவ்வாறாக பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட வெவ்வொரு தட்டச்சு முறைகளையும் ஒருங்கிணைத்து மேலும் சில சிறப்பம்சங்களை இணைத்து ஒரே மென்பொருளாகத் தருவதே புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர் திரு. . முத்துக்கருப்பனின் `ஈசி தமிழ் (eeZee Tamil Beta, a Unicode Supported Tamil Typing Software) என்னும் தமிழ் மென்பொருளின் நோக்கமாக இருக்கவேண்டும்.


ஈசி தமிழின் முதல் WINDOW என்னை வியப்படையச்செய்தது. காரணம் விண்டோ என்றால் சதுரமாகவோ (அ) செவ்வகமாகவோ தான் கண்டுள்ளேன் ஆனால் திரு. ப. முத்துக்கருப்பனின் ஈசி தமிழ் மென்பொருளின் தொடக்க நிலை விண்டோ அ என்ற வடிவில் உதயமாவது வெகுவாக கவர்ந்தது. இதுவும் இம்மென்பொருளின் ஒரு சிறப்புதான். இருப்பினும் இம்மென்பொருளுக்கு தமிழில் பெயர் வைத்திருக்கலாம்.

 

இம்மென்பொருளினை MS OFFICE மற்றும் STAR OFFICE ல் உள்ள (Word, Excel, Power Point, Publisher, Access, Notepad, Paint) என அனைத்து இடங்களிலும் மிகச்சிறப்பாகவும், எளிமையாகவும் பயன் படுத்தலாம்.

 

இது ஒரு ஒருங்கிணைந்த தமிழ் Typing மென்பொருள்
(It is an Integrated Tamil Typing Software),
கீழ்வரும் நான்கு தட்டச்சு முறைகளும் ஒருங்கினைக்கப்பட்டது.

 
 

1        Old Typewriter Keyboard

 

2        Tamil99 1999 ஆம் ஆண்டு தமிழக அரசு வடிவமைக்கப்பட்டது.

 

3        eeZee Tamil Phonetic Typing Keyboard – எழுத்திலக்கண மரபுப்படி வடிவமைக்கப்பட்டது

 

4        eeZee Tamil Typing Keyboard – மிக எளிய முறை தட்டச்சு (10 வயது மாணவர்கள் கூட Type செய்யலாம்)

 

முதல் இரண்டும் பழைய முறைகளாகும். அடுத்திருக்கும் இரண்டும் ஈசி தமிழ் மென்பொருளுக்குரியது. ஆகவே கடைசி இரண்டை மட்டும் பயன்படுத்தி அதனை பற்றி மட்டும் எழுதியுள்ளேன்.

 

Keyboard ல் தட்டச்சு செய்வதில் சிரமப்படுவோர்களுக்காக On Screen Keyboard Option  தேர்வு செய்வதன் மூலம் திரையில் தென்படும் Keyboardல் Type செய்யும் வசதியும் இதில் உள்ளது.

 

eeZee Tamil Phonetic Typing Keyboard எழுத்திலக்கண மரபுப்படி வடிவமைக்கப்பட்டது என்பது இம்மென்பொருளின் சிறப்பம்சமாகும். இவ்வம்சம் வேறு எதிலும் இல்லாத ஒன்றாகும்.

 

தேவையான தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் (English Spelling) தட்டினாலே தமிழில் எழுத்திலக்கணப்படி வரும் என்பது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. அதனை பரிசோதிக்க கீழ்வரும் உதாரணங்களை பயன்படுத்தினேன்

 

சில உதாரணங்கள்

1.   நன்றி (nanri) -  இரண்டு சுழி ன ஐ தொடர்ந்து ற வகை வல்லின எழுத்துதான் வரும்

 

2.   மண்டபம் (mandapam) , மண்டை (mandai) – ட வகை வல்லின எழுத்திற்கு முன் மூன்று சுழி ண வகை மெல்லின எழுத்துதான் வரும்

 

3.   சங்கு (sangu), பங்கு (pangu) - ங் என்ற எழுத்தை தொடர்ந்து க வரிசை வல்லின எழுத்துதான் வரும்

 

4.   மஞ்சல் (manjal) – ஞ என்ற எழுத்தை தொடர்ந்து ச வரிசை வல்லின எழுத்துதான் வரும்.

 

5.   பற்றி (patri) – ஆங்கிலதில் தட்டினாலே வல்லின ற்றி வரும்

 

6.   ஃபாதெர் (faather) – ஆங்கிலதில் faa தட்டினாலே வல்லின ஃபா வரும்

 

7.   கௌரி (gowri / gowri) - ஆங்கிலதில் gow/kow தட்டினாலே வல்லின கௌ வரும்

 

8.   சதிஷ் (sathish/ satheesh) - ஆங்கிலதில் Sh தட்டினாலே வல்லின ஷ் வரும்

இந்த மென்பொருளை Download செய்து நீங்களும் முயற்சிக்கலாம்
 
eeZee Tamil Typing Keyboard – மிக எளிய முறை தட்டச்சு (10 வயது மாணவர்கள் கூட Type செய்யலாம்) என்பது இந்த மென் பொருளின் மற்றுமொரு சிறப்பாகும். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி எளிய முறையில் தமிழ் Type செய்யலாம். இம்முறையில் தட்டச்சு செய்ய விழைவோர் On Screen Keyboard Option தேர்வு செய்து தட்டச்சு செய்ய வேண்டும் இல்லையெனில் கடினமாக இருக்கும்
eeZee Tamil Converter Beta ல் மாற்றப்படவேண்டிய மூலச் செய்தியை (Source Material) தமிழின் எந்த எழுத்துருவில் (பாமினி, தாமினி, TSCII) இருந்தாலும், எந்த அமைப்பிலிருந்தாலும் அதனை UNICODE முறையில் எந்த எழுத்துருவிற்கும் அமைப்பு மாறாமல்  மாற்றிக்கொடுக்கும் வகையில் இந்த Converter வடிவமைக்கப் பட்டுள்ளது. நான் கண்டவரையில் அமைப்பு மாறாமல் மாற்றும் வசதி eeZee Tamil Converter Beta ல் மட்டுமே காண்கிறேன்.
தமிழ் கட்டுரைகளில் ஒரு சில இடங்களில் ஆங்கிலம் தேவைப் பட்டால் ScrLk (Scroll Lock) பட்டனை OFF செய்து விட்டு ஆங்கிலதில் Type செய்யலாம் மீண்டும் தமிழுக்கு வர ScrLk (Scroll Lock) பட்டனை ON செய்தால் தமிழில் தொடர்ந்து type செய்யலாம் என்பதும் இம் மென்பொருளின் முக்கியம்சமாகும்.
 
இதில் தமிழ் எண்ணுருக்கள், தமிழ் நாள், மாதம், வருடம், பற்று, வரவு, மேற்படி, தமிழ் ரூபாய் , இந்திய ரூபாய் போன்றவை களுக்கு குறியீடுகள் மிகச் சுலபமாக பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது,
 
௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௰,௱,௲ – தமிழ் எண்ணுரு
௳ - தமிழ் நாள் குறியீடு
௴ - தமிழ் மாதக் குறியீடு
௵ - தமிழ் வருடக்குறியீடு
  ௷ - தமிழ் பற்று வரவு குறியீடு
௸ - தமிழ் மேற்படி குறியீடு
௹ தமிழ் ரூபாய் குறியீடு
௺ - தமிழ் எண் குறியீடு
ௐ - தமிழ் ஓம் குறியீடு
 
இவை அனைத்தும் நான் கண்ட பயன்கள், பயன்படுத்துவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும், அவ்வளவு நுனுக்கங்கள் நிறைந்துள்ள ஒரு மென்பொருள்
  
தமிழ் இனி மெல்லச் சாவும்’
 
என கூப்பாடு போடும் தமிழ் நெஞ்சங்களே தமிழ் வாழ வேண்டும் என்றால் அது தன் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி்க் கொள்ள வேண்டும். தமிழ் வாழவும் வளரவும் வெறும் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் மட்டும் போதாது, உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க திரு. . முத்துக்கருப்பன் போல் கணினி வாயிலாகவும் செய்யவேண்டிய கடமை நமக்குள்ளது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நம் தாய்த்தமிழ் மொழிக்கு திரு. . முத்துக்கருப்பன் ஆற்றியுள்ள பணி பாரட்டுதலுக்குரியது.
 
ஈசி தமிழ் (eeZee Tamil Beta, a Unicode Supported Tamil Typing Software)
 பற்றிய மேலும் சில தகவல்கள் கீழ்வருமாறு
 
யுனிக்கோடு முறையில் தமிழில் Type செய்வதற்கான பல வசதிகள் அடங்கிய தமிழ் மென்பொருள்

HOW TO USE eeZee Tamil

Start eeZee Tamil (from desktop icon or programs menu), you will see home screen like this

eeZee TAMIL HOME SCREEN

If you wish to type in Tamil first select the keyboard layout for typing mode. If you know typewriting then select the option typewriter and then select language Tamil then start typing in any window.

If you wish to click and type input method then select the Onscreen Keyboard then an Onscreen Keyboard will be displayed and the appropriate keyboard layout will also be loaded now you can input through keyboard and also through Onscreen Keyboard.

Always make sure that Language is selected as Tamil (Scroll Lock is on) for entering text in Tamil.

Check Launch at Startup to start eeZee Tamil during windows startup.

 USING eeZee Tamil KEYBOARD


Select eeZee Tamil in the Onscreen Keyboard Options. eeZee Tamil Keyboard will be shown as below



In Menu select window and click Use to type as shown above to enable typing in onscreen keyboard.




 Now you can enter text through eeZee Tamil Onscreen Keyboard.

FOR TYPING IN PHONETIC

Click phonetic option in Onscreen Keyboard group you will see phonetic keyboard as shown below

 
 
 
In Menu select window and click Use to type as shown above to enable typing in onscreen keyboard.

Now you can input through keyboard and also through the onscreen keyboard.

 USING CONVERTOR

Click on the Launch Convertor button in Main Screen

Convertor will be launched as shown below


You can paste text from other applications in the Source Text Area or you can open a MS Word file or text file by clicking Open button.

Select the Encoding types and check Format as Source if you want the converted text to be formatted as that of source text.

Copy the converted text or save it as a text file using the buttons given.

For more information and support contact:

P. Muthukaruppan
+91-9789387620


 

 

 

No comments:

Post a Comment