Pages

Wednesday 6 June 2012

வெள்ளி நகர்வு

 


சென்னை: வெள்ளி கிரகம் சூரியனை கடக்கும்போது சிறு புள்ளியாக தெரிந்ததை பொதுமக்கள் பிரமிப்போடு கண்டு ரசித்தனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வெள்ளி கிரகம் கடக்கும் போது வெள்ளி கிரகம் சூரியனில் சிறு புள்ளியாக தோன்றும். 121 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அற்புத நிகழ்வு இன்று நடந்தது. சென்னை மாநகரை பொறுத்தவரை அதிகாலை 3.40 மணிக்கே சூரியனின் விளிம்பை வெள்ளி தொட்டு விடும் என்றும், அதிகாலை 3.58 முதல் சூரியனை கடக்க தொடங்கி விடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் அதிகாலை 5.40 மணிக்குத்தான் சூரியன் உதயமானது. எனவே சூரியனின் விளிம்பை வெள்ளி தொடுவதையோ, நகர்வதையோ பொதுமக்கள் அதிகாலையில் காண இயலவில்லை. காலை 6 மணிக்கு மேல் 10.21 வரை சூரியனை வெள்ளி கிரகம் கடப்பது சிறு புள்ளியாக பொதுமக்களுக்கு தெளிவாக தெரிந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வானியல் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, தாம்பரத்தில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டுகளித்தனர்.

No comments:

Post a Comment