Pages

Wednesday 5 June 2013

The Real Estate Regulation Bill

 
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திற்கான மசோதா இரண்டாம் முறையாக மறுஆய்வுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒழங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இம்மசோதாவில் ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர் நலன் பாதுகாக்க  பல உரிமைகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மசோதாவின் சிறப்பு அம்சங்கள்

கட்டுமான திட்டத்தை ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அனைத்து கட்டுமான நிறுவனங்களும் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்திற்கும் தனித் தனி வங்கிக் கணக்குகளை பராமரிக்க வேண்டும். அதாவது குடியிருப்பு விற்பனையின் போது வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட தொகை தொடர்புடைய திட்டத்திற்கு தான் பயன்படுத்தப்பட்டதா? அல்லது பழைய திட்டதிற்கு மாற்றப்பட்டதா? அல்லது ரியல் எஸ்டேட் அதிபரின் கடனடைக்க பயன்படுத்தப்பட்டதா? என்பதை உறுதி செய்ய 70% தொகையை ரியல் எஸ்டேட் அதிபர்கள் குறிப்பிட்ட கட்டுமானத் திட்டத்திற்கான தனி வங்கிக் கணக்கில் வைக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பல இடங்களில் கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதால் வாடிக்கையாளர் நலன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆகையால் அதிக காலதாமதமாக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் இருந்து வாடிக்கையாளர் தான் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்பப்பெற இம்மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 

கட்டுமானப் பணிகளைத் தொடங்க அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பின்புதான் வீடுகளை வாங்குபவர்களிடம் இருந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பணம் வசூலிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து எழுத்துப்பூரவமான ஒப்பந்தம் இல்லாமல் 10% மேல் முன்பணம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பெறக்கூடாது. இதன் மூலம் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவது மற்றொரு   நோக்கமாகும்.
 



மாநிலங்களில் அமைக்கப்படும் ஆணையத்தின் பணிகள்

கட்டுமானத் திட்டத்தை தாமதமாக முடிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களை தண்டித்தல் வாடிக்கையாளரின் பணத்தை வட்டியுடன் மீட்டுத்தருதல்.
 
தவறாக விளம்பரம் செய்யும் ரியல் எஸ்டேட் முதலாளிகளை தண்டித்தல்.
மேலும் வீடுகளைக் கட்டும் முன்பே அது தொடர்பாக படங்களுடன் விளம்பரங்களை வெளியிடுவது போன்ற ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் ரியல் எஸ்டேட் அதிபர்களை தண்டித்தல்.
முதல் முறை விதிகளை மீறும் ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம் இருந்து திட்ட மதிப்பீட்டில் 10% தண்டணைத் தொகையாக வசூலிக்கப்படும். தொடர்ச்சியாக விதிகளை மீறும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டணை பெற்றுத்தருதல்.
22 மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது, சில திருத்தங்கள் தேவை என்று 5 மாநிலங்கள் கூறியுள்ளன, சட்டீஸ்கர் மாநிலம் மட்டும் முழுமையாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகிறது.

 

No comments:

Post a Comment